திமுகவுடன் டிடிவி தினகரன் கள்ளக்கூட்டணி: அமைச்சர் உதயகுமார்

தி.மு.க.வில் உறுப்பினர் பதவியிழந்த அழகிரியும் அ.தி.மு.க.வில் உறுப்பினர் பதவியிழந்த டி.டி.வி. தினகரனும் இணைந்து கள்ளக் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை சிலைமானில் பேசிய அவர், திருவாரூர் தொகுதியில் மு.க.அழகிரியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் அவரை தி.மு.க.வில் இடம் பிடிக்கச் செய்யவும், திருப்பரங்குன்றத்தில் டி.டி.வி. தரப்பினரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் ஆதாயம் அடையவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில் இன்று கருணாஸ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும், டிடிவி தினகரனையும் சந்தித்துள்ளது அமைச்சரின் கூற்றை நிரூபணம் செய்திருப்பதாக அதிமுகவினர் கருத்து கூறி வருகின்றனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *