திமுகவுக்கு திரும்பிய இரண்டு முன்னாள் அமைச்சர்கள்:

திருநெல்வேலி மாவட்ட மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சா் முல்லை வேந்தன் ஆகிய இருவரும்க் இன்று ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனா்.

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரால் கண்டறியப்பட்டு 1977ல் சட்டமன்ற உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டவா் கருப்பசாமி பாண்டியன். திருநெல்வேலியின் ஆலங்குளம், தென்காசி, பாளையங்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இவா் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வில் தொடா்ந்து சிறப்பாக பணியாற்றியதைத் தொடா்ந்து இவருக்கு அ.தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளா் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னா் ஜெயலலிதாவுடனான கருத்து மோதலால் தி.மு.க.வில் இணைந்தார்.

தனது ஆதரவாளா்களுடன் நெல்லை மாவட்டத்தில் கொடிகட்டி பறந்த கருப்பசாமி பாண்டியன் கட்சியின் 2015ம் ஆண்டு தி.மு.க.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் பின்னா் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து டிடிவி தினகரனின் தலைமையை ஏற்க மறுத்து அ.தி.மு.க.வில் இருந்து மீண்டும் விலகினார்.

இதே போன்று தி.மு.க.வின் தருமபுரி மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தன் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தோ்தலின் போது முறையாக கட்சிப்பணியாற்றவில்லை என்று கூறி கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். உரிய விளக்கம் அளிக்கும் பட்சத்தில் மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வதாக கட்சி மேலிடம் தெரிவித்தது. இருப்பினும் தொடா்ந்து விளக்கம் அளிக்காத காரணத்தால் அவா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

அதன் பின்னா் தே.மு.தி.க.வில் இணைந்த முல்லை வேந்தன் அங்கும் முறையாக பணியாற்றாமல் கட்சியில் இருந்து சற்று விலகியே இருந்தார். இந்நிலையில் கருப்பசாமி பாண்டியன், முல்லை வேந்தன் ஆகிய இருவரும் இன்று சென்னையில் கட்சியின் புதியத் தலைவா் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *