திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சரின் மகன்!

திமுக தலைவராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து அக்கட்சியின் வளர்ச்சி அபரிதமாக இருப்பதாக அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவித்துவருகின்றன

குறிப்பாக அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் உட்பட பல தலைவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் திமுகவின் பலம் அதிகரித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு ராமசாமி அவர்களின் மகனும் மூத்த வழக்கறிஞருமான இராம. வெற்றிச்செல்வன் என்பவர் திமுகவில் இணைந்தார். அவர் மு க ஸ்டாலின் அவர்களள இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தன்னை திமுகவின் ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *