திமுகவின் தலைவர், பொருளாளர் யார்? ஆகஸ்ட் 28ல் தேர்தல்

திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் காலமானதை அடுத்து அடுத்த தலைவருக்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். அதேபோல் அன்றைய தினம் திமுக பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட வரும் 26ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 27ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு கனிமொழியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த தேர்தலில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் க.அன்பழகன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *