shadow

தினகரன் கட்சியில் ‘மானாட மயிலாட’ கலா: தேர்தலில் போட்டியா?

பிரபல டான்ஸ் மாஸ்டரும், கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராகவும் உள்ள கலா, இன்று தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியில் இணைந்துள்ளார்.

தினகரன் கட்சியில் இணைந்தது குறித்து கலா கூறுகையில், ‘ ‘பொதுவாக ஒரு இயக்கம், தலைவர் என்றால் அவர் நம் மனதிற்கு பிடித்தவராக இருக்க வேண்டும். அந்த வகையில் டிடிவி தினகரன் எனக்கு பிடித்த தலைவராக இருக்கிறார். அவரது செயல்பாடுகளும், அதில் வெளிப்படும் நேர்மைத்தன்மையும் என்னை கவர்ந்துவிட்டது. நான் 30 வருடங்களாக திரைத்துறையில் இருந்தவள். என்னிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை திறம்படச் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் கலா போட்டியிடவில்லை என்றும் ஆனால் அனைத்து தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளதாகவும் கலா தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *