தினகரனின் அமமுகவில் இணைந்த பாஜக பெண் பிரபலம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சியில் இணையும் நிகழ்வு இந்தியா முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் பாஜக முன்னாள் மாநில மகளிரணி செயலாளரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜெமிலா கடந்த சில மாதங்களாக பாஜக தலைமையின்மீது கருத்து வேறுபாட்டுடன் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஜெமிலா, டிடிவி தினகரனை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து அமமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஜெமிலாவுக்கு அமமுக கட்சியின் உறுப்பினர் அட்டையை கொடுத்த டிடிவி தினகரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *