shadow

திடீரென ரீஎண்ட்ரி ஆன கவின்: சாண்டி, லாஸ்லியாவுக்கு இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியேறிய கவின், இன்று மீண்டும் இணைந்துள்ளதால் சாண்டி மற்றும் லாஸ்லியாவுக்கு இன்ப அதிர்ச்சியாகியுள்ளது

கவின் வீட்டை விட்டு செல்ல முடிவு எடுத்ததும் சாண்டி, லாஸ்லியா ஆகிய இருவருக்கும் பெரும் மனக்கவலை ஏற்பட்டது. குறிப்பாக லாஸ்லியாவால் இரண்டு நாட்கள் சகஜமாகவே இருக்க முடியவில்லை

இந்த நிலையில் பிக்பாஸ் மேடையில் இன்று கமல்ஹாசனுடன் தோன்றும் கவின், தொலைக்காட்சி வழியே தனது நண்பர்களை சந்திக்கின்றார். கமலுடன் கவின் இருக்கும் காட்சியை பார்க்கும் லாஸ்லியாவுக்கும் சாண்டிக்கும் இன்ப அதிர்ச்சி ஆகிறது. இவர்களுடன் கவின் என்ன பேசினார் என்பது இன்று ஒளிபரப்பாகும் என தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *