திடீரென நீலக்கலரில் மாறிய கால்: மருத்துவமனை சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் என்பவர் அலுவலகம் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பின்னர் உடை மாற்றும் போது தன்னுடைய கால் நீல நிறமாக மாறி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்

இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனை சென்றார். மருத்துவர்கள் அவரை தீவிர பரிசோதனை செய்து, ஸ்கேன் எக்ஸ்ரே எல்லாம் எடுத்து நீல கலரில் கால் மாறியதன் காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சித்தனர்.

அதன்பின்னர்தான் தற்செயலாக அந்த நபர் நீலக்கலரில் தன்னுடைய கால் மாறியது ஏன் என்பது புரிய வந்தது. அவர் அன்றைய தினம் புதிய ஜீன்ஸ் ஒன்றை அணிந்துள்ளார். அந்த ஜீன்ஸில் உள்ள சாயம் தான் காலில் ஒட்டி உள்ளது என்பது பின்னர் தெரியவந்தது

இதனையடுத்து இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ததை அடுத்து இந்த பதிவுக்கு ஒரு சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான லைக்ஸ்கள் மற்றும் ரீடுவிட்டுக்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

புதிதாக வாங்கிய ஜீன்ஸ் அணிந்ததால் அதில் உள்ள சாயம் ஒட்டி இருப்பது தெரியாமல் நான் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைக்கு செலவு செய்து விட்டேன் என்று அவர் அப்பாவித்தனமாக கூறியிருப்பது பெரும் நகைச்சுவைக்கு உரியதாக இருந்தது

Leave a Reply