திங்கள் வரை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை!

திங்கள் வரை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை!

அயோத்தி ராமர்கோவில் – பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வெளியிடவிருக்கும் நிலையில் உபி மாநிலம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் டெல்லி, கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் ஜம்முவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் இன்று முதல் திங்கள் வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.