தாயின் இறுதிச்சடங்கை வாட்ஸ் அப் நேரடி வீடியோ மூலம் பார்த்த மகள்

மகாராஷ்டிரா மாநில தலைநகர்் மும்பை அருகே உள்ள மனோர் என்ற கிராமத்தை சேர்ந்த நீராபாய் படேல் என்பவரின்் மனைவி தீரஜ் படேல் உடல்நலக்குறைவால் சமீபத்தில் மரணம் அடைந்தார். தாய் இறந்த செய்தியை குஜராத்தில் வசிக்கும் மகளிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தான் வேலையில் பிஸியாக இருப்பதால் தன்னால் தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஊருக்கு வர முடியாது என்று கூறி வாட்ஸ் ஆப் வீடியோகாலில் தாயின் முகத்தை காட்டுமாறும் ஊரில் இருப்பவர்களிடம் கேட்டுள்ளார். அதே போல தாய்க்கு நடந்த இறுதிச் சடங்கை அவர் வாட்ஸ் அப்பிலேயே அவர் கண்ணீருடன் பார்த்தார்.

அவரது இந்த நடவடிக்கையால், ஊர் மக்கள் கடும் கோபமடைந்தனர். இதனிடையே, இறுதிச் சடங்கில் தான் பங்கேற்க முடியவில்லை, அஸ்தி கரைப்பதற்காக வர வேண்டும் என்று அவர்கள் அழைத்துள்ளனர். அதற்கு அவர், அஸ்தியை கொரியரில் அனுப்பிவிடுங்கள் என்று பதில் கூறியுள்ளார்.

இதனை அடுத்து தாயின் உடலை தகனம் செய்த கிராம மக்களே, அவரது அஸ்தியையும் மகளுக்கு கேட்டதுபோல கொரியரில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *