தாக்குதல் வழக்கில் தலைமைறைவான நடிகர் சந்தானம்

பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்த் என்பவரை நடிகர் சந்தானம் தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சந்தானம் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் அவர் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகர் சந்தானம், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கண்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் திருமண மண்டபம் கட்டுவதற்காக 3 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்ததாகவும், பணத்தை வாங்கிய அந்த நிறுவனம் திருமணம் மண்டபம் கட்டாமல் தாமதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த சந்தானம் இதுகுறித்து நியாயம் கேட்க அவரது அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவருகும் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் சண்முகசுந்தரம் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த், சண்முகசுந்தரத்திற்கு ஆதரவாக பேச சந்தானம் வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த கைகலப்பில் காயம் அடைந்த வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தானம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனவே சந்தானம் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் வடபழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தானம் திடீரென தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *