தவான் அபார சதம்: ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன்கள் இலக்கு

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. தவான் அபார சதம், விராத் கோஹ்லி, ரோஹித் சர்மாவின் அரைசதங்களால் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 352 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியுள்ளது.

இன்றைய போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய தவான் 109 பந்துகளில் 117 ரன்கள் அடித்தார். இதில் 16 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல் ரோஹித் சர்மா 70 பந்துகளில் 57 ரன்களும், விராத் கோஹ்லி 77 பந்துகளில் 82 ரன்களும் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 27 பந்துகளில் 48 ரன்களும் தோனி 14 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணியின் ஸ்டோனிஸ் 2 விக்கெட்டுக்களையும், நைல், ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *