shadow

தவறான தகவல் மன்னன் மோடி: ராகுல்காந்தி கிண்டல்

பெட்ரோல், டீசல் விலை குறித்து பிரதமர் மோடி தவறான தகவல்களை கொடுத்து கொண்டிருப்பதால் அவருக்கு ‘தவறான தகவல் மன்னன்’ என்ற பட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

‘‘மற்ற நாடுகளை பற்றி எப்போதும் முன்னுதாரணமாக பேசும் பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் விலை விஷயத்தில் மற்ற நாடுகளை பின்பற்றுவதில்லையே. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் வெளிநாடுகளை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதனுடன் ‘‘தவறான தகவல் மன்னன்’’ என குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரதமர் மோடி பேசுகிறார். அதில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறுகிறார். அதனை கேட்டு இந்தி நடிகர் சல்மான் கான் சிரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

Leave a Reply