shadow

‘தளபதி 65’ பட இயக்குனர் பட்டியலில் இணைந்த ‘மாஸ்டர்’

தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் ’தளபதி 65’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் மகிழ்திருமேனி, பாண்டியராஜன், ஜெயம் ராஜா, வெற்றிமாறன், பேரரசு, அட்லி உள்பட பல பெயர்கள் அடிபட்டு வந்தாலும் சமீபத்தில் இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்காரா தான் இயக்குவார் என்று செய்திகள் வெளியாகின. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ’தளபதி 65’ பட இயக்குனர்கள் பட்டியலில் தற்போது லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார். மாஸ்டர் படத்தை இயக்கும் பாணி, லோகேஷ் கனகராஜின் சரியான திட்டமிடல் மற்றும் விரைந்து படத்தை முடிக்கும் சுறுசுறுப்பு ஆகியவை விஜய்க்கு மிகவும் பிடித்ததாகவும், எனவே மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணிபுரிய விஜய் முடிவு செய்ததாகவும் இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *