தளபதி 65 படத்தின் நாயகி அமலாபால்? புதிய தகவல்

தளபதி 65 படத்தின் நாயகி அமலாபால்? புதிய தகவல்

தளபதி 65 திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கவிருப்பதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அமலாபாலிடம் இயக்குனர் சுதா கொங்கரா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

அமலாபால் ஏற்கனவே விஜய் நடித்த தலைவா படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் என்பதும் தற்போது இரண்டாவது முறையாக அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அமலாபாலுக்கு இந்த படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.