தளபதி 64 படத்தின் மொத்த டீம் இதுதான்

விஜய் நடிக்கவுள்ள 64வது திரைப்படமான ‘தளபதி 64’ படத்தின் பூஜை சற்றுமுன் நடைபெற்றது. இந்த பூஜையில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகாமேனன், சாந்தனு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஸ்டண்ட் சிவா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்

இன்றைய பூஜை எளிமையாக நடந்து முடிந்ததை அடுத்து அடுத்த வாரம் ஆயுதபூஜை முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது

இந்த படத்திற்காக விஜய் தொடர்ச்சியாக ஞாயிறு தவிர அனைத்து நாட்களிலும் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

 

Leave a Reply