shadow

தளபதி 63 ‘ படத்தில் விஜயின் கேரக்டர் இதுதான் !

‘ தெறி ‘ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் வெளியான ‘ மெர்சல் ‘ படம் சில அரசியல்வாதிகளால் சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்டாலும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து மீண்டும் அட்லீ – விஜய் கூட்டணி இணைந்து படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்து கொண்டு வருகிறது.

‘ தளபதி 63 ‘ என தற்போதைய தலைப்பு கொண்ட இந்த படம் கால்பந்தை மையமாக கொண்டது என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே . இந்த நிலையில் இந்த படத்தில் தளபதி விஜயின் பெயர் மைக்கேல் என்றும் வடசென்னையை சார்ந்த மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அதற்கு பின்பு கால்பந்தாட்டத்தில் ஈடுபாடு ஏற்பட்டு பின்னர் பயிற்சியாளராக மாறியதுதான் இந்த படத்தின் கதை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.மேலும் யோகிபாபு, விவேக்,கதிர், ஆனந்த்பாபு , தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Leave a Reply