‘தளபதி 63’ படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ.40 கோடியா?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு சாட்டிலைட் உரிமையை சன் குழுமம் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழி சாட்டிலைட் உரிமையையும் இந்நிறுவனம் ரூ.40 கோடி கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி படத்தை அடுத்து மிகப்பெரிய விலைக்கு சாட்டிலைட் உரிமை விற்பனையானது இந்த படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது

இவ்வருடம் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில் விஜய், நயன்தாரா, பரியேறும் பெருமாள்’ கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்பாபு, தீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *