shadow

தளபதி விஜய்யுடன் இணையும் தல இயக்குனர்

தல அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’, விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கிய இயக்குனர் சிவா அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது

அட்லி இயக்கத்தில் தற்போது ‘தளபதி 63’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கும் விஜய், சமீபத்தில் இயக்குனர் சிவாவிடமும் கதை கேட்டுள்ளதாகதாகவும், சிவா கூறிய அதிரடி ஆக்சன் கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும், அனேகமாக ‘விஜய் 64’ படத்தை இயக்குனர் சிவா இயக்க சத்யஜோதி தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையானால் ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிகுமார், எஸ்.ஜே.சூர்யா, பேரரசு ஆகிய இயக்குனர்களை அடுத்து அஜித், விஜய் ஆகிய இரண்டு நடிகர்களின் படங்களை இயக்கியுள்ள இயக்குனர்கள் பட்டியலில் சிவாவும் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply