’தல 60’ படத்தின் அஜித்தின் நியூலுக்!

அஜித் நடிக்க இருக்கும் 60வது படத்தை எச்.வினோத் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தில் அஜித் புதிய தோற்றத்தில் இருக்க உள்ளதாகவும் முந்தைய படங்களில் உள்ளது போன்று இல்லாமல் இந்த படத்தில் அஜீத்தின் தோற்றம் இளமையாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியானது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று அஜித்துடன் ரசிகர் ஒருவர் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அஜித் கருகருவென மீசை மற்றும் தலைமுடியுடன் அஜித் இளமையாக காட்சி அளிக்கிறார்
இந்த தோற்றம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை அடுத்து அஜித் தனது 60வது படத்தின் படப்பிடிப்பிற்கு தயாராகி விட்டார் என்றும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *