shadow

தல 59 படத்தில் ஸ்ரீதேவி மகள்!..

இந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் திரைப்படம் ‘தல 59’ என்ற பெயரில் தற்போது தமிழில் ரீமேக் ஆகி வருகிறது. இந்த படத்தை பெரும் பட்ஜெட்டில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஏற்கனவே அஜித் மனைவியாக வித்யாபாலன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அஜித்-வித்யாபாலன் மகளாக ஜான்விகபூர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அஜித், வித்யாபாலன், ஷராதாஸ்ரீநாத், ஆண்ட்ரியா தரியங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கவுள்ள இந்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அத்தியாயம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *