தல 59′ படத்தில் இணைந்த யுவன்ஷங்கர் ராஜா

தல அஜித், லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘தல 59’ படத்தின் படப்பிடிப்பு பூஜை நேற்று நடந்தது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் போனிகபூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தகவலை யுவன்ஷங்கர் ராஜா தனது டுவிட்டரில் சந்தோஷத்துடன் பதிவு செய்துள்ளார்.

அஜித் நடித்த ‘மங்காத்தா’ படத்திற்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா அதன்பின்னர் இந்த படத்திற்குத்தான் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா’ படத்தின் பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது போலவே இந்த படத்திலும் யுவன் அசத்துவார் என எதிர்பார்க்கலாம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *