தல அஜித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது அடுத்த படத்தை அறிவிப்பு செய்தது. பாரம்பரிய பட நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பை தலைப்புடன் அறிவித்தார்.

அஜித் குமார் நடிக்க, சிவா இயக்கும் இந்த படத்துக்கு “விசுவாசம்” என்று தலைப்பிடபட்டு இருக்கிறது. ஜனவரி மாதம் “விசுவாசம்” படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2018 தீபாவளி அன்று “விசுவாசம்” வெளி வரும் என தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அறிவித்தார்.

இந்த படத்தின் நாயகியாக நடிக்க மூன்று முன்னண் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *