’தலைவர் 168’ படத்தையும் ரிலீஸ் செய்வேன்: உதயநிதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பேட்ட படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்று ரிலீஸ் செய்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தை நல்ல முறையில் விளம்பரப்படுத்தியற்காக உதயநிதிக்கு ரஜினிகாந்த் நேரில் பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் கடந்த சில நாட்களாக ரஜினிகாந்தை கடுமையாக உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். இதனால் ’தலைவர் 168’ படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்த படத்தை வாங்கி உதயநிதி வெளியிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை நான் விநியோகம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், இதற்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பத்திரிகை செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது

ரஜினியின் படத்தை ரிலீஸ் செய்து லாபம் பார்க்கும் உதயநிதி அவரை பற்றி விமர்சனம் செய்வது சரியா? என்ற கேள்வியை ரஜினி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply