தலித் வாலிபர் மரணத்திற்கு ஆதார் கார்டு காரணமா? அதிர்ச்சி தகவல்

1ஆதார் கார்டு இல்லாவிட்டால் ரேஷன் பொருட்கள் தரமுடியாது என்று கூறப்பட்டதால் பட்டினியால் உ.பி. மாநிலத்தை சேர்ந்த தலித் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ள்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடல் ஊனமுற்ற மனைவியுடன் மிகவும் வறுமையுடன் வாழ்ந்த 28 வயது தலித் இளைஞர் தர்மேந்திரா. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டம் தாருதா கிராமத்தை சேர்ந்த இவருக்கு இன்னும் ஆதார் கார்டு கிடைக்கவில்லை. இதனால் ரே‌ஷனில் அவருக்கு உணவு பொருட்கள் வழங்குவதை நிறுத்திவிட்டனர்.

ரேஷன் பொருட்களை நம்பியே வாழ்ந்து வந்த இவரது குடும்பம் இதனால் பட்டினியால் தவித்தது. இந்நிலையில் நேற்று தர்மேந்திரா பட்டினி காரணமாக மரணம் அடைந்தார். அவருடைய மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்த சம்பவம் உ.பி மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இதுகுறித்து தகவல் வெளிவந்ததும் பத்திரிக்கைகளும், டி.வி. சேனல்களும் இந்த செய்தியை பெரிதுபடுத்தி வெளியிட்டதை அடுத்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *