shadow

தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: யஷ்வந்த் சின்ஹா

Ahmedabad: Former finance minister Yashwant Sinha interacts with the media in Ahmedabad on Tuesday. PTI Photo by Santosh Hirlekar (PTI11_14_2017_000100B)

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் கடந்த 1975ஆம் ஆண்டு எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது. இந்த எமர்ஜென்ஸி ஜூன் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டதால் நேற்று இதுகுறித்து பிரதமர் மோடி உள்பட பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்தியாவில் தற்போதும் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த்சின்ஹா கூறியுள்ளார். பா.ஜ.க.வில் இருந்து சமீபத்தில் விலகிய யஷ்வந்த் சின்கா, வாரணாசியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி கூட்டம் ஒன்றில் பேசியதாவது:-

ந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட தற்போது அதிக ஆபத்து நிறைந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நாட்டில் நிலவுகிறது. ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. அரசியலமைப்பை நகைச்சுவை ஆக்கிவிட்டனர்.

அனைத்து அரசு அமைப்புகளும், நிறுவனங்களும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப இந்த அமைப்புகள் செயல்படுகின்றன. மற்றவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு உத்தரவிடுவார்கள். ஆனால், அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணைக்கும் உத்தரவிட மாட்டார்கள்.

பண மதிப்பு நீக்க காலத்தில் முதல் ஐந்து நாட்களுக்குள் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.745.58 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த வங்கியின் இயக்குனராக பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உள்ளார். எனவே, இவ்வளவு பணம் பரிமாற்றம் நடந்தது குறித்து விசாரணைக்கு யார் உத்தரவிடுவார்?

நீதித்துறையில் எதுவும் சரியில்லை என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளர். எனவே, இந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

Leave a Reply