shadow

தர்பார் படத்தின் டம்டம் பாடல்: அட்டகாசமான ரஜினியின் டான்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார்

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகளின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

ரஜினியின் அட்டகாசமான நடனம் மற்றும் நயன்தாராவின் ரொமான்ஸ் பார்வை இந்த வீடியோவில் இருப்பதால் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *