தயாரிப்பாளர் திடீர் மாற்றமா? ‘தளபதி 64’ படம் குறித்த பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் தயாரிப்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை தற்போது ரஜினி, கமல் உள்பட பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் ஒரு நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் டுவிட்டரில் ஒரு வதந்தி பரவி வருகிறது.

ஆனால் இந்த தகவலை ‘தளபதி 64’ தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் இ ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடையவிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வருகின்றனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தில் அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply