shadow

தம்பியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த நவாஸ் ஷெரீப்


பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் பதவி இழந்தார். அவரது 2 மகன்கள், மகள் மற்றும் மருமகன் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

எனவே, இவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. எனவே நவாஸ் ஷெரீப் பதவி இழந்ததால் காலியாக இருந்த லாகூர் பாராளுமன்ற இடைத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் தனது மனைவி மரியம் நவாசை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற செய்தார்.

முன்னதாக அவரது தம்பியும், பஞ்சாப் மாகான முதல்-மந்திரியுமான ஷெபாப் நவாசை நிறுத்தி அவரை பிரதமராக்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அவரது குடும்பத்தினர் அதை விரும்பாததால் முடிவு மாற்றப்பட்டது. இதனால் அண்ணன்- தம்பி இடையே கருத்து மோதல்கள் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2018) தொடக்கத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சிக்கு வலுவான தலைமை இல்லாத நிலை உள்ளது.

 

எனவே வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தனது தம்பி ஷெபாப் ஷெரீப்பை பிரதமர் வேட்பாளராக நவாஸ் ஷெரீப் நேற்று அறிவித்தார். அதை தொடர்ந்து அண்ணன்- தம்பிக்கு இடையே இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Leave a Reply