தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் தோல்வி: வெறுப்பில் கபடி ரசிகர்கள்

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் புரோ கபடி போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளை பெற்று வருவதால் கபடி ரசிகர்கள் வெறுப்பில் உள்ளனர்.

இதுவரை 17 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

தெலுங்கு டைட்டான்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் படுசொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 37-58 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தனர். சென்னையில் தமிழ் தலைவாஸ் அணிக்கு கிடைத்த 3வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *