தமிழ் கலாச்சாரம் இந்த லட்சணத்துல இருக்குது: நடிகை கஸ்தூரி ஆதங்கம்

தூத்துக்குடி அருகே கார் கொள்ளையன் ராஜபாண்டியன் என்பவர் நான்காவது மனைவியால் கொல்லப்பட்டதும் அந்த மனைவிக்கு மூன்றாவது காதலி உதவியதுமான ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தூத்துகுடியை சேர்ந்த ராஜபாண்டி என்ற கார் கொள்ளையனுக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இதனையடுத்து கார் கொள்ளைக்கு இரகசியமாக துப்பு கொடுக்கும் ஒரு பெண்ணிடம் அவர் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் அந்தப் பெண்ணின் மருமகள் சித்ராவையும் கரெக்ட் செய்த ராஜபாண்டி, மாமியார் மருமகள் என இரண்டு பேரிடமும் குடித்தனம் நடத்தியுள்ளார். இந்த நிலையில் துப்பு கொடுக்கும் பெண்ணின் மகனை திருமணம் செய்துவிட்டு ராஜபாண்டியுடனும் வாழ்ந்து வந்த சித்ராவுக்கு மேலும் ராமர் என்ற ஒரு புதிய காதலன் கிடைத்துள்ளார். சித்ராவின் இந்த புதிய காதல் ராஜபாண்டிக்கு தெரிந்ததால் அவர் ஆத்திரம் அடைந்துள்ளார்.

இதனால் ராஜபாண்டியை சித்ரா தனது மூன்றாவது காதலன் ராமர் மற்றும் அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர் உதவியுடன் கொலை செய்துவிட்டு ராமர் மற்றும் சக்திவேலுடன் தலைமறைவானார். ராஜபாண்டியின் உடலை தலைவேறு, உடல் வேறாக துண்டித்து இரண்டு இடங்களில் மூவரும் வீசியுள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் ராஜபாண்டியின் தலை மற்றும் உடலை கைப்பற்றி சித்ரா மற்றும் அவரது புதிய காதலர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் தெரிவித்தபோது உவ்வே ! தமிழர் கலாச்சாரம் பார்த்தீங்களா. இந்த லட்சணத்துல நாம ஊரானை நொட்டை சொல்லுறோம் என்று பதிவு செய்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *