தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் ‘ஜியோ ப்ரவுசர்’

எளிமையாக இண்டெர்நெட்டில் ப்ரவுஸ் செய்ய ‘ஜியோ ப்ரவுசர்’ ஆப்பை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியப் பயனாளர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஜியோ ப்ரவுசர் தமிழ் உட்பட எட்டு மொழிகளில் பயன்படுத்தலாம்.

மற்ற ப்ரவுசர்களை போன்றே Incognito mode, செய்திகள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்யும் வசதி என மக்களைக் கவரும் வகையில் ஜியோ ப்ரவுசர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு ஃபோன்களுக்கான ப்ரவுசராக மட்டுமே தற்போதைய ஜியோ ப்ரவுசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலமாகவே ஃபேஸ்புக், கூகுள், அமேசான், ஃப்ளிப்கார்ட், புக் மை ஷோ ஆகிய தளங்களை பார்க்க முடியும்.

கூகுள் வாய்ஸ் தேடுதல் ஆப்ஷனும் இந்த பிரவுசரில் இடம்பெற்றுள்ளது. 4.8MB அளவு கொண்ட இந்த ப்ரவுசரை கூகுள் ப்ளே மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *