தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது ஏன்? முதலமைச்சர் பழனிச்சாமி விளக்கம்

பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது புதிய மரக்கன்றுகளை நட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது, அவர்களால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். முதல்வரின் இந்த பேச்சுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது, பாமகவினரால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றார். இன்று அவர்களே மரம் நடுகிறார்கள் என்று கூறினார்

மேலும் அழகிரி-ஸ்டாலின் மோதல் திமுகவின் உட்கட்சி பிரச்சினை என்றும், திமுக போல், அதிமுக அல்ல என்றும், தாங்கள் ஜனநாயக முறைப்படி செயல்படுபவர்கள் எனவும் முதலமைச்சர் கூறினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *