தமிழே ஒழுங்கா வரல்ல, இதுல திருவள்ளுவருக்கு சப்போர்ட்டா? பிரபல இயக்குனருக்கு நெத்தியடி

திருவள்ளுவர் விவகாரத்தை அரசியல்வாதிகள் தங்களுடைய சுயலாபத்திற்கு பயன்படுத்தி வரும் நிலையில் இந்த விஷயத்தில் தலையிடாமல் திரையுலகினர் ஒதுங்கி இருக்கலாம்.

ஆனால் ஒருசில திரையுலகை சேர்ந்தவர்கள் தாங்களும் திருவள்ளுவர் ஆதரவாளர் என்பதை காண்பித்து கொள்ள வேண்டும் என்பதால் இதுகுறித்து தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ‘மூடர் கூடம்’ இயக்குனர் நவீன், தனது டுவிட்டரில், ‘வள்ளுவர் தோழில் தினிக்கப்பட்டிருந்த பூனூலை அகற்றி, அவருக்கு வென்னிற ஆடை சூட்டி, வள்ளுவத்தை உலகப் பொதுமறை ஆக்கிய பணியில் பெரியாரின் திராவிட இயக்கத்தின் பங்கு மிகப் பெரியது. வள்ளுவத்தை சாதிமத வட்டத்திற்குள் சுறுக்கிவிடாமல் காப்பதே தமிழர் கடமை’ என்று பதிவு செய்துள்ளார்.

இதற்கு ஒரு நெட்டிசன், நாலு வரியில் நாற்பது பிழைகள், உங்களுக்கெல்லாம் திருவள்ளுவர் சப்போர்ட் தேவையா? என்று பதிலடி கொடுத்துள்ளார். நவீனின் டுவீட்டில் உள்ள தவறுகள்:

‘தோழில் அல்ல – தோளில்..
பூனூல் அல்ல – பூணூல்..
சுறுக்கி அல்ல – சுருக்கி…
தினிக்க அல்ல – திணிக்க..
வென்னிற அல்ல – வெண்ணிற

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *