தமிழச்சி ஆனால் தமிழ் தெரியாது! மிதிலிராஜை கிண்டல் செய்த ரசிகர்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியுடன் சமீபத்தில் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி 3-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது

இதனை அடுத்து சச்சின் டெண்டுல்கர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு குறிப்பாக கேப்டன் மிதாலி ராஜ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த வாழ்த்து டுவீட்டின் கமெண்ட் பகுதியில் ஒருவர் மிதிலிராஜ் ஒரு ஒரு தமிழ்ப்பெண், ஆனால் அவருக்கு தமிழ் பேசத் தெரியாது. அவர் ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி மட்டுமே பேசுவார் என குறிப்பிட்டிருந்தார்

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மிதலி ராஜ், ’தமிழ் என் தாய்மொழி, நான் தமிழ் நன்றாக பேசுவேன், தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’ என்று கூறியுள்ளார்

மேலும் அதை விட எனக்கு ஒரு இந்தியராக வாழ்வதில் தான் விருப்பம் அதிகம். என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி நீங்கள் விளம்பரம் தேடிக் தேடிக் கொள்ள வேண்டாம் என்று பதிலடி கொடுத்துள்ளார்

ரசிகரின் கேள்வியும் அதற்கு பதிலடி கொடுத்த மிதிலிராஜின் டுவீட்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரலாகி வருகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *