தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூடி 7 பேர்களை விடுதலை செய்வது குறித்த தீர்மானம் நிறைவேற்றி ஆளுனரிடம் ஒப்படைத்தது. ஆளூனர் இதுகுறித்து இன்னும் முடிவெடுக்காத நிலையில் நேற்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆளூனர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்தார்/

இந்த சந்திப்பின்போது தனது மனுவை பரிவுடன் ஆளுனர் படித்ததாகவும், விரைவில் அவர் தனது மகனை விடுதலை செய்வது குறித்த முடிவினை எடுப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *