ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முன்பே இதுகுறித்து அறிவித்திருந்த நிலையில், வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் இந்த மினி கிளினிக் துவங்கப்படும் என்று முதல்வர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கீட்டு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கவும், பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பெற்றுத் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கால்நடைகளை இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply