shadow

தமிழகத்தை நோக்கி இரண்டு புயல்களா? வதந்தி என்கிறார் வெதர்மேன்

தமிழகத்தை நோக்கி இரண்டு புயல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், இந்த புயல்கள் வரும் 7ஆம் தேதி மற்றும் 15ஆம் தேதி சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சேதம் விளைவிக்கும் என்றும் முன்னணி ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த செய்தி உண்மையல்ல என்றும், இந்த வதந்தியால் மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ‘இந்திய வானிலை மையத்தைக் காட்டி இரண்டு புயல்கள் இந்த மாதம் தமிழகத்தைத் தாக்கும் என்ற செய்தியில் உண்மையில்லை, இது வதந்தி, எனவே இந்தச் செய்தியைப் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்கள் உடனடியாக இந்தச் செய்தியை அகற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது உண்மையல்ல, ஐஎம்டி இத்தகைய செய்திகளை எந்த ஒரு ஊடகத்துக்கும் அளிக்கவில்லை என்பதே உண்மை.

இந்த வதந்தியை அடுத்து மக்கள் தேவையில்லாமல் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்துவது நல்லது.

வடகிழக்குப் பருவநிலை இன்னமும் அமையக்கூட இல்லை. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உள்ளன, இதனால் ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், ஆகிய இடங்களில் 7-8 தேதிகளில் மழை பெய்யும். புயல்கள் இல்லவேயில்லை.

இவ்வாறு அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.

Leave a Reply