தமிழகத்தில் புயல்: மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுரை

மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக் கடலையொட்டி தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் வரும் ஏப்ரல் 28 முதல் தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

29ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க நாளை முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும், இலங்கை கடற்கரை பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *