shadow

aimsடெல்லியை தலைமையிட கொண்டு செயல்பட்டு வரும் எய்ம்ஸ் (All India Institute of Medical Sciences) மருத்துவமனை தமிழ்நாடு உள்பட ஐந்து இடங்களில் கிளைகள் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சுகாதார துறையின் தலைமை அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கிளை திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை விரைவில் பரிசீலித்து இதற்கான அனுமதியை விரைவில் வழங்கும் என்றும் கூறினார்.

பிரசவ காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மரணம் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும் அதை தடுப்பதற்காகவே எய்ம்ஸ் மருத்துவமனையின் கிளை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது பிறக்கும் 1000 குழந்தைகளில் 21 குழந்தைகள் பிரசவ நேரத்திலேயே மரணம் அடைந்து வருவதாகவும், அதேபொல் ஒரு லட்சம் தாய்மார்களில் 68 பேர் பிரசவ காலங்களில் மரணம் அடைந்து வருவதாகவும் ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

Leave a Reply