தனுஷ் பட பாடல் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது ஏன்?

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம்மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் எப்போது வெளிவரும் என்று தெரியாத நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல்கள் யூடியூபில் இருந்து திடீரென நீக்கப்பட்டன.

இதனால் இந்த படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் கிளம்பின. ஆனால் படம் கைவிடப்படவில்லை என்றும் வெகுவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் பாடல்களை ஒரு முன்னணி இசை நிறுவனம் வாங்க முன்வந்துள்ளதை அடுத்தே யூயூடிபில் இருந்து பாடல்கள் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

Leave a Reply