தனுஷ் படத்தின் வில்லனாகும் ‘பாகுபலி’ வில்லன்
RANA
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தில் ஹீரோ பிரபாஸூக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்வாள்தேவன் என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் ராணா. சமீபத்தில் வெளியான ‘பெங்களூர் நாட்கள்’ படத்திலும் நடித்த இவர் தற்போது தனுஷ் நடிக்கும் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தனுஷ், மேஹா ஆகாஷ் நடிக்கும் ‘எனை நோக்கிய் பாயும் தோட்டா’ என்ற படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தில் ‘ராணா’ வில்லனாக நடிக்கவுள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றதோடு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பொதுவாக கவுதம் மேனன் ஒரு படத்தை இயக்கி முடிக்க கிட்டத்தட்ட ஒருவருடங்கள் எடுத்து கொள்வார். ஆனால் இந்த படம் ஒரு குறுகிய கால படம் என்றும் அதிகபட்சமாக மூன்றே மாதங்களில் இந்த படத்தை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்தபின்னர் தனுஷ், வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *