shadow

தனுஷின் ‘மாரி 2′ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடித்த ‘மாரி 2’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யுஏ’ சான்றிதழ் கொடுத்த செய்தி நேற்று வெளியாகியுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் ஓரிரு நாட்களில் தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ள தேதியை நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். அதன்படி யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவான ‘மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘ரெளடி பேபி’ என்ற பாடல் நவம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில், வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகும்.

 

Leave a Reply