‘தடம்’ வெற்றியை அடுத்து அருண்விஜய்யை புகழ்ந்த இயக்குனர்

அருண்விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கிய ‘தடம்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அருண்விஜய்க்கும் மகிழ்திருமேனிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் அருண்விஜய் நடித்து வரும் அடுத்த படமான ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்தை இயக்கி வரும் ‘மூடர் கூடம்’ நவீன் அருண்விஜய் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

‘அக்னி சிறகுகள்’ படத்திற்காக அருண்விஜய்யை முதன்முதலில் டெஸ்ட்லுக் எடுத்தபோதே அவரை தவிர வேறு யாரும் இந்த கேரக்டருக்கு பொருந்த மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனி, அருண்விஜய் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், நாசர், ஜெகபதிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Leave a Reply