டோண்ட் வொர்ரி கேரளா: உலகம் முழுவதும் வைரலான ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை நூற்றுக்கணக்கான உயிரிழப்பு, லட்சக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ள நிலையில் கேரள மக்களுக்கு உலகம் முழுவதும் இருந்து உதவிக்கரங்கள் நீள்கின்றன. ஆனாலும், தேவை அதிகமிருப்பதால், உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் கேரள மக்கள்.

இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் ஏ.ஆர்.ரகுமான், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா… முஸ்தபா…’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா… கேரளா… டோண்ட் வொர்ரி கேரளா… காலம் நம் தோழன் கேரளா…’ என்று பாடினார்.

அதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் உலக அளவில் கேரளாவின் துயரம் தெரியவரும் உதவிகள் பெருகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *