இன்று நடைபெற்ற டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

153 என்ற பெங்களூரு அணி கொடுத்த இலக்கை டெல்லி அணி 17.3 ஓவர்களில் அடையவில்லை என்பதால் இந்த போட்டியில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

நாளைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் அந்த அணி தகுதி பெற்று மூன்றாவது இடத்தை பிடிக்கும். பெங்களூர் 4வது இடத்திற்ல் தள்ளப்படும்

ஒருவேளை ஐதராபாத் தோல்வியடைந்தால் பெங்களூர் மூன்றாவது இடத்திலும் கொல்கத்தா 4-வது இடத்திலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply