டெல்லியில் விற்பனைக்கு வந்தது சுத்தமான காற்று: 10 நிமிடம் சுவாசிக்க ரூ.300

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு இருப்பதை வைத்து இதை வியாபாராக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலிக்கும் ஆக்சிஜன் பார் தொடங்கப்பட்டுள்ளது

டெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்டண முறையில் சுத்தமான காற்றை விற்பனை செய்யும் ஆக்சிஜன் பார் நிறுவனர் கூறுகையில், ‘கடந்த மே மாதம் இந்த ஆக்சிஜன் பார் தொடங்கப்பட்டது. இங்கு எடை குறைப்பு, நினைவாற்றலை தக்க வைத்தல், மனதிற்கு ஆற்றல், ஊக்கம் அளிப்பது போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. மேலும் மனச்சோர்வை நீக்கவும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலிக்கும் முறையும் உள்ளது. அதாவது 10 முதல் 15 நிமிடங்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க ரூ.299 வசூலிக்கப்படுகிறது. சாதாரணமாக உள்ளிழுக்கும் ஆக்சிஜன் அளவை விட நான்கைந்து மடங்கு ஆக்சிஜன் உள்ளிழுக்க அனுமதிக்கப்படும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *