டெல்லியில் ஜீன்ஸ், கிராமத்தில் சேலையா? பிரியங்கா காந்தியின் உடையை விமர்சனம் செய்த பாஜக எம்பி

டெல்லியில் ஜீன்ஸ் டாப்ஸ் அணியும் பிரியங்கா காந்தி கிராமங்களுக்கு செல்லும்போது மட்டும் சேலை அணிவது ஏன்? என்று பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. ஹரீஷ் திவிவேதி என்பவர் கேள்வி எழுப்பியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. ஹரீஷ் திவிவேதி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘பிரியங்கா காந்தி டெல்லியில் ஜீன்ஸ் மற்றும் டாப் உடையும், கிராமப்புற பகுதிகளுக்கு செல்லுபோது சேலை கட்டி கொண்டு, பொட்டு வைத்து கொண்டும் செல்கிறார். பாஜகவை பொருத்தவரை ராகுல் காந்தியோ, பிரியங்கா காந்தியோ ஒரு விஷயமே இல்லை என்றும், ராகுலை போல் பிரியங்காவும் விரைவில் தோல்வியை சந்திப்பார் என்றும் கூறினார்.

பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. ஹரீஷ் திவிவேதியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர், பிரியங்கா காந்தி எங்கு சென்றாலும் நாகரீகமான உடையை அணிந்து செல்வதாகவும், அவருடைய உடையை விமர்சனம் செய்வது நல்லதல்ல என்றும் கூறியுள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *