டுவிட்டரில் உள்ள வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி?

நம்மில் பலருக்கு டுவிட்டரில் அக்கவுண்ட் இருக்கும் என்பது தெரிந்ததே. இன்றைய நிலையில் டுவிட்டர் ஒரு முக்கிய சமூக வலைத்தளம். உலகில் உள்ள பிரபலங்கள் அனைவருக்கும் இதில் அக்கவுண்ட் இருக்கின்றது என்பதும் அதில் பெரும்பாலானோர் அட்மின் வைக்காமல் அவர்களே பதிவு செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டுவிட்டரில் உள்ள வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி? என்பதை பார்ப்போம். உங்களுக்கு பிடித்த டுவிட்டரில் உள்ள ஒரு வீடியோவை டவுன்லோடு செய்து சேவ் செய்து கொண்டு நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அந்த வீடியோவை பார்க்க விரும்பினால் செய்ய வேண்டியது என்ன?

முதலில் எந்த டுவீட்டில் உள்ள வீடியோவை டவுன்லோடு செய்ய வேண்டுமோ, அந்த டுவீட்டின் யூ.ஆர்.எல்-ஐ காப்பி செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக //twittervideodownloader.com/ என்ற இணையத்திற்கு சென்று யூ.ஆர்.எல்-ஐ இங்கு பேஸ்ட் செய்யவும் என்ற குறிப்பிட்ட இடத்தில் டுவிட்டர் யூ.ஆர்.எல்-ஐ பேஸ்ட் செய்யவும்

உடனே உங்கள் வீடியோ எந்த ரெசலூசனில் டவுன்லோடு செய்ய வேண்டும் என்று கேட்கும். அதன் அளவையும் குறிப்பிட்டு அதற்கு நேராக உள்ள ‘டவுன்லோடு வீடியோ’ என்பதை கிளிக் செய்தால் உடனே உங்கள் வீடியோ டவுன்லோடு ஆகி திரையில் தோன்றும். அதனை Ctrl S செய்து சேவ் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் இனிமேல் நீங்கள் நினைத்த நேரமெல்லாம் இந்த வீடியோவை பார்த்து கொள்ளலாம்

Leave a Reply