shadow

டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய்?

சென்னையை சேர்ந்தசமூக சேவையாளர் டிராபிக் ராமசாமி குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் அவருடைய வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாகி வருகிறது. டிராபிக் ராமசாமி கேரக்டரில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ரோகிணி மற்றும் ஆர்.கே.சுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனி சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் ஆண்டனி இந்த படத்தில் நடிகராகவே நடிக்கவுள்ளாராம். இந்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் விஜய்விக்ரம் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சுக்ரன்’ படத்தின் மூலம்தான் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேரக்டரில் விஜய் நடிக்கவிருந்ததாகவும், ஆனால் தற்போது விஜய்க்கு பதில் விஜய் ஆண்டனி நடிப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *